முன்னெப்போதும் இல்லாத சுத்தமான சருமம்

ஃபேஷியல் கிளென்சிங்

புத்தம் புதியது, அதி சுத்தமானது

பிரகாசமான முடிவுகள், நாளுக்கு நாள்

எங்கள் facial brushes மூலம் உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தை மாற்றியமைக்கவும்: பிரகாசமான, ஆரோக்கியமான தோற்றமுடைய சருமத்திற்கு ஆழமாகச் சுத்தம் செய்தல், லிஃப்ட் செய்தல் மற்றும் உறுதியாக்குதல்

Pore-Opening Deep Warming Technology

உங்கள் சருமத்தைத் தயார் செய்யவும்

வார்மிங் மைக்ரோபேர்ல்களுக்கு நன்றி, துளைகளை உடனடியாக சுத்தம் செய்து, செயலில் உள்ள பொருட்களை திறம்பட உறிஞ்சுவதற்கு உங்கள் சருமத்தை தயார்படுத்துங்கள்.

SmartSonic Pulsation Technology

Effective Deep Cleansing

ஒரு நிமிடத்திற்கு 8,000வரையானசோனிக் பல்சேஷன்கள் ஒப்பனை மீதங்களைத் தளத்தி மெதுவாக உதிரச் செய்யும். உங்கள் தேவைகளுக்கு இன்டென்சிடியை சரிசெய்து பாருங்கள்.

ஆழமான சுத்தம் மற்றும் லிஃப்டிங்

Ultra Hygienic Deep Cleansing

சுலபமான நிபுணத்துவ அளவிலான சருமப் பராமரிப்பு

பயனுள்ள, மென்மையான சுத்திகரிப்பு - உங்கள் தினசரி சருமப் பராமரிப்பு வழக்கத்திற்கு ஏற்றது.

Product Image

Eye-Nose Area Targeted Design

ஸ்பாட்-ஆன் க்ளென்சிங்

கண் மற்றும் மூக்கைச் சுற்றி ஆழமாக மற்றும் துல்லியமாக சுத்தம் செய்தல், ஒரு இடத்தையும் தவறவிடாமல்.

MicroCurrent Face-Lift Technology

அல்டிமேட் ஸ்கின் டிரான்ஸ்ஃபர்மேஷன்

எங்களின் மேம்பட்ட மைக்ரோ-கரன்ட் ஃபேஸ்-லிஃப்ட் தொழில்நுட்பத்தின் மூலம் முதுமையின் அறிகுறிகளை எதிர்த்துப் போராட, பிரஷ்ஷைப் புரட்டி, 65+ முகம் மற்றும் கழுத்து தசைகளின் மீது பயன்படுத்தி முக வரையறையை மேம்படுத்துங்கள்.

அம்சங்கள்

ஆனால் அதோடு முடியவில்லை

Geske application screenshot

உள்ளே தொழில்நுட்பம்

உங்கள் புதிய தனிப்பட்ட சருமப் பராமரிப்பு நிபுணரை சந்தித்திடுங்கள்

இலவச GESKE ஜெர்மன் பியூட்டி டெக் செயலி மூலம் அழகுத் தொழில்நுட்பத்தின் ஆற்றலைத் தழுவி, முன்னெப்போதும் இல்லாத வகையில் சருமப் பராமரிப்பை அனுபவித்திடுங்கள்

FAQ

    ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ் என்பது அழுக்கு, எண்ணெய் மற்றும் மேக்கப் எச்சங்களிலிருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஓர் அழகுச் சாதனமாகும். உங்கள் சருமத்தையும் துளைகளையும் ஆழமாகச் சுத்தம் செய்வதே இதன் நோக்கம் எனும் அதேவேளையில், மசாஜ் அல்லது ஹீட்டிங் போன்ற கூடுதல் அம்சங்களுடன் பல வகையான ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ்கள் உள்ளன, இவை ஒரு முழுமையான சருமப் பராமரிப்பு அமர்வுக்கு வழிசெய்து உங்கள் சருமத்தைப் பொலிவுறச் செய்கின்றன!

    ஃபேஷியல் பிரஷ்கள் போன்ற ஃபேஷியல் கிளென்சிங் சாதனங்கள் உங்கள் சருமத்தை ஆழமாகச் சுத்தம் செய்து, உங்கள் துளைகளின் அடைப்பை அகற்றி, ஆரோக்கியமான தோற்றமுடைய, பளபளக்கும் சருமத்திற்கு வழிவகுக்கலாம். பரிந்துரைக்கப்பட்டதை விட அதிக நேரம் அல்லது அடிக்கடி இதைப் பயன்படுத்தாமல் இருப்பதையும், உங்கள் சரும வகைக்கு ஏற்ற சருமப் பராமரிப்புப் பொருட்களுடன் இணைப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம், முகப்பரு, ரோசாசியா அல்லது பிற சரும நிலைமைகள் உள்ளவர்கள் ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு தங்கள் மருத்துவர் அல்லது தோல் மருத்துவரிடம் பேச வேண்டும்.

    உங்களின் மற்றும் உங்கள் சரும வகையின் தேவைகளைப் பூர்த்திசெய்கின்ற ஒன்றே சிறந்த ஃபேஷியல் கிளென்சிங் பிரஷாகும். நீங்கள் உங்கள் ஃபேஷியல் பிரஷைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் உயர்தரமான பொருட்கள் உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும். எங்களின் GESKE ஃபேஷியல் பிரஷ்களின் பிரிஸில்கள், சருமத்திற்கு உகந்த, சூப்பர் சாஃப்ட் சிலிகான் மூலம் தயாரிக்கப்படுகின்றன, அவை துளைகளிலுள்ள அழுக்கை கனிவாக அகற்றுவதுடன், சுத்தம் செய்ய சுலபமானவை.

    உங்கள் தனிப்பட்ட தேவைகள், விருப்பங்கள், சரும வகை ஆகியவற்றைப் பொறுத்து, எலெக்ட்ரிக் அல்லாத பிரஷ்கள் முதல் சோனிக் ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ்கள் வரையென பல்வேறு வகையான பிரஷ்களை வழங்குகிறோம். நீங்கள் உங்கள் முகத்தை ஆழமாக கிளென்ஸ் செய்ய விரும்புகிற அதே நேரத்தில் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்றால், ஒரு ஃபேஷியல் பிரஷ் உங்களுக்கு ஏற்றது! இது எந்தவகையான பகட்டுமில்லாத, ஆனால் ஏராளமான பலன்களைக் கொடுக்கின்ற ஒரு ஃபேஷியல் கிளென்சிங் சாதனமாகும்: நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம் மற்றும் கிளென்சிங் அமர்வின் முழுக் கட்டுப்பாடும் உங்களிடமே உள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜிங் கேபிள் இல்லாமல் ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ் வருவதால், இது விடுமுறைக்கு வெளியில் செல்லும்போதும், பயணத்தின்போதும் பயன்படுத்துவதற்கான சிறந்த கருவியாகும். அதுமட்டுமல்லாமல், ஒரு சிறந்த பிரஷானது உங்கள் சருமத்தையும், துளைகளையும் அழுக்கு, எண்ணெய் மற்றும் ஒப்பனை எச்சங்களிலிருந்து விடுவிக்கிறது. சோனிக் ஃபேஷியல் பிரஷ் என்பது பல்ஸ் மற்றும் வைப்ரேஷன் வாயிலாக உங்கள் சருமத்தை ஆழமாக கிளென்ஸ் செய்கின்ற ஓர் அழகு சாதனமாகும். பிரிஸ்கள் விரைவாக நகர்வதால், இந்த அழகுக் கருவிகள் சோனிக் பிரஷ்கள் அல்லது சோனிக் கிளென்சர்கள் என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வார்மிங் அல்லது மைக்ரோகரண்ட் போன்ற பிற அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட சோனிக் ஃபேஷியல் பிரஷ்களும் உள்ளன. மசாஜ், ஹீட்டிங் மற்றும் மைக்ரோகரண்ட் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் கூடிய பல வகையான ஃபேஷியல் பிரஷ்களை GESKE வழங்குகிறது.

    அன்றைய நாளுக்குத் தயாராவதற்கு உங்கள் தினசரி காலை வழக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ்களைப் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் ஃபேஷியல் கிளென்சரைப் பயன்படுத்தி, சுமார் இரண்டு நிமிடங்களுக்கு உங்கள் ஃபேஷியல் பிரஷ் மூலம் உங்கள் சருமத்தை கனிவாக மசாஜ் செய்யவும். பின்னர் உங்கள் முகத்தைக் கழுவி, உங்களுக்குப் பிடித்த ஃபேஸ் மாஸ்க் அல்லது டே கிரீம் தடவவும். பாக்டீரியா பரவுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் உங்கள் ஸ்கின் கிளென்சிங் பிரஷை ஒரு சிறப்புச் சாதன கிளென்சரை உபயோகித்து சுத்தம் செய்ய மறக்காதீர்கள். சிறந்த முடிவுகளுக்கு, உங்கள் பிரத்தியேக வழக்கத்தைப் பெற இலவச GESKE செயலியைப் பதிவிறக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

    உங்கள் முகத்தை சுத்தம் செய்வது உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஓர் இன்றியமையாத பகுதியாக இருக்க வேண்டும், அதனால்தான் உங்கள் சோனிக் ஃபேஷியல் பிரஷை தினமும் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் சருமத்தின் வகையைப் பொறுத்து, இதை காலையிலும் மாலையிலும் பயன்படுத்தலாம். உங்கள் சருமம் மிகவும் சென்சிடிவாக இருந்தால், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அதைப் பயன்படுத்தப் பரிசீலித்திடுங்கள்.

    உங்கள் ஃபேஷியல் பிரஷை உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ற கிளென்சருடன் பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் தேர்வுசெய்ய GESKE பல வகையான ஃபேஷியல் கிளென்சர்களை வழங்குகிறது. உங்கள் சருமத்தை கனிவாக எக்ஸ்ஃபோலியேட் செய்ய உங்கள் ஃபேஷியல் கிளென்சிங் பிரஷைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் ஃபேஷியல் கிளென்சிங் பிரஷை எங்கள் GESKE பீலிங் கிளென்சர் போன்ற ஓர் எக்ஸ்ஃபோலியேட்டருடன் இணைக்கலாம்.

    வழக்கமாகப் பயன்படுத்தும் போது, ஃபேஷியல் கிளென்சிங் பிரஷ்கள் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்கலாம், ஏனெனில் அவை ஆழமாக சுத்தம் செய்து துளைகளின் தடைகளை அகற்றும். கறைகள் மற்றும் அசுத்தங்களுக்கு ஏற்ற சருமப் பராமரிப்புப் பொருட்களுடன் இணைந்தால், ஃபேஷியல் பிரஷ்கள் ஆரோக்கியமான தோற்றமளிக்கு சருமத்தையும், இளமைப் பொலிவையும் பெற உங்களுக்கு உதவும். பிளாக்ஹெட்ஸ் தொடர்பாக உங்களுக்குக் கடுமையான பிரச்சினைகள் இருந்தால், எங்களின் பிரத்தியேக பிளாக்ஹெட் ரிமூவர்களைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.

    மேலும் தயாரிப்புகளை ஆராய்க